திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு 167 ஏக்கர் ராணுவ நிலத்தை மத்திய அரசு வழங்கியது


திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு 167 ஏக்கர் ராணுவ நிலத்தை மத்திய அரசு வழங்கியது
x

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு 167 ஏக்கர் ராணுவ நிலத்தை மத்திய அரசு வழங்கியது. இதன் மூலம் 12 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்தது.

திருச்சி

செம்பட்டு,ஜூலை.26-

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு 167 ஏக்கர் ராணுவ நிலத்தை மத்திய அரசு வழங்கியது. இதன் மூலம் 12 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்தது.

ஓடுபாதை

திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சரக்கு போக்குவரத்து, பயணிகளின் எண்ணிக்கையை 2025-2026-ம் ஆண்டுக்குள் 2.52 மில்லியன் ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் போதுமான ஓடுபாதை இல்லாத காரணத்தினால் அதனை அதிகரிக்க 8,126 அடி நீளத்திலிருந்து 12 ஆயிரத்து 500 அடி வரை நீட்டிக்க இந்திய விமான போக்குவரத்து ஆணையரகம் 2010-2011 நிதி ஆண்டில் இதற்கான ஆய்வு அறிக்கை சமர்ப்பித்தது.

இதற்காக ராணுவ இடத்தை பெற்றுத்தர மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. இதற்காக பாதுகாப்புத் துறையில் 167 ஏக்கர் நிலத்தினை உள்ளடக்கிய 342.62 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநில அரசு 2018-ம் ஆண்டு நிர்வாக அனுமதி வழங்கி அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

12 ஆண்டுகால...

இந்தநிலையில் ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தை பெற பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு ராணுவத்துக்கு சொந்தமான 167 ஏக்கர் நிலத்தை வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 12 ஆண்டு காலமாக நடைபெற்ற இந்த பிரச்சினைக்கு விடிவுகாலம் பிறந்தது. இதன் மூலம் திருச்சி விமான நிலைய விரிவாக்க பணி விரைவில் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான 166.97 ஏக்கர் நிலத்தை வழங்கியதற்கு திருநாவுக்கரசர் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார்.


Next Story