மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்


மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 29 Aug 2023 12:15 AM IST (Updated: 29 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குவது குறித்து மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து மீனவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்று முத்தரசன் கூறினார்.

நாகப்பட்டினம்


நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குவது குறித்து மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து மீனவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்று முத்தரசன் கூறினார்.

பேட்டி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நாகை மாவட்டம் வாய்மேட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மீனவர்களின் பாதுகாப்பை...

நாகை மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவது குறித்து மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி பாதுகாப்புக்கு உறுதி அளிக்க வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு சரியான அளவு காவிரி தண்ணீர் வராததால் பயிர்கள் கருகியது. எனவே விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் பயிர்க்காப்பீடு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட்தேர்வு குறித்து தீர்மானம்

அதேபோல் நீட் தேர்விற்கு விலக்கு அளிப்பது குறித்து தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

மேலும் மதுரையில் நடந்த அ.தி.மு.க மாநாட்டில் நீட் தேர்வு குறித்து ஒரே ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது எம்.எல்.ஏ.க்கள் மாரிமுத்து, நாகை மாலி மற்றும் பழனிசாமி, உலகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story