மத்திய அரசின் சிறப்பு மருத்துவ வல்லுனர்கள் குழு ஆய்வு


மத்திய அரசின் சிறப்பு மருத்துவ வல்லுனர்கள் குழு ஆய்வு
x

கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய அரசின் சிறப்பு மருத்துவ வல்லுனர்கள் குழு ஆய்வு செய்தது.

புதுக்கோட்டை

விராலிமலை தாலுகா கொடும்பாளூர் சத்திரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு கடந்த 2019-ம் ஆண்டில் மத்திய அரசின் தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையானது 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மேலும் இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு உடனுக்குடன் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்றிதழ் பெற தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா? என ஆய்வு செய்ய மத்திய அரசின் சிறப்பு மருத்துவ வல்லுனர்கள் குழுவிலிருந்து டாக்டர் நிரஞ்சன்ரெட்டி, டெபஜோதி மஜீம்தார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது துணை இயக்குனர் சுகாதாரபணிகள் ராம் கணேஷ் மற்றும் சுகாதார நிலைய மருத்துவர் பிருந்தா தேவி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story