மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தேசிய கொடி ஏந்தி பேரணி


மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தேசிய கொடி ஏந்தி பேரணி
x

தூத்துக்குடியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தேசிய கொடி ஏந்தி பேரணி நடத்தினர்.

தூத்துக்குடி

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தூத்துக்குடி மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் தேசிய கொடி ஏந்தியபடி மோட்டார் சைக்கிள் பேரணி நேற்று நடந்தது. பேரணியை கமாண்டர் வி.பி.சிங் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் துரைச்சாமி மற்றும் பாதுகாப்பு படையினர் மோட்டார் சைக்கிளில் தேசிய கொடியை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். புதிய துறைமுகம் அருகே தொடங்கிய பேரணி பழைய துறைமுகம், காமராஜ் கல்லூரி வழியாக மீண்டும் புதிய துறைமுகத்தை வந்தடைந்தது. பேரணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story