மத்திய ஜெயிலில் சிறைத்துறை டி.ஜி.பி. திடீர் ஆய்வு - கைதிகள், போலீசாரிடம் குறைகளை கேட்டார்


மத்திய ஜெயிலில் சிறைத்துறை டி.ஜி.பி. திடீர் ஆய்வு - கைதிகள், போலீசாரிடம் குறைகளை கேட்டார்
x

மதுரை மத்திய சிறையில் தமிழக சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஷ்பூஜாரி திடீரென்று ஆய்வு செய்தார். அவர் கைதிகள், போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மதுரை


மதுரை மத்திய சிறையில் தமிழக சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஷ்பூஜாரி திடீரென்று ஆய்வு செய்தார். அவர் கைதிகள், போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

சிறைத்துறை டி.ஜி.பி.

தமிழக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்தவர் சுனில்குமார் சிங். இவர் திடீரென்று மாற்றப்பட்டு அம்ரேஷ்பூஜாரி சிறைத்துறை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். அவர் தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் கைதிகள், போலீசாரின் குறைகளை கேட்பது, அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி டி.ஜி.பி.அம்ரேஷ்பூஜாரி நேற்று காலை மதுரை வந்தார். அவரை மத்திய சிறை டி.ஐ.ஜி.பழனி, சூப்பிரண்டு வசந்தகண்ணன், ஜெயிலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

குறைகளை கேட்டார்

அப்போது டி.ஜி.பி. சிறையில் உள்ள விசாரணை மற்றும் தண்டனை கைதிகளின் அறைகளுக்கு சென்று ஆய்வு செய்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் சிறையில் பணியாற்றும் போலீசார் மற்றும் அலுவலர்களிடம் குறைகளை கேட்டார்.

பின்னர் போலீஸ் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினர். அதில் சிறைக்குள் கைதிகளுக்கு நடைபெறும் சிறு மோதல் பற்றியும், எதிர் காலத்தில் இது போன்ற பிரச்சினைகளை தடுப்பது குறித்தும் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.. மேலும் அவர் டி.ஐ.ஜி. முகாம் அலுவலகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது.


Next Story