திருச்செந்தூர் கோவிலில் மத்திய மந்திரி எல்.முருகன் சிறப்பு யாகம்


திருச்செந்தூர் கோவிலில் மத்திய மந்திரி எல்.முருகன் சிறப்பு யாகம்
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிலில் மத்திய மந்திரி எல்.முருகன் சிறப்பு யாகம் நடத்தினார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய மந்திரி எல்.முருகன் நேற்று சிறப்பு யாகம் நடத்தினார்.

மத்திய மந்திரி சிறப்பு யாகம்

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேற்று முன்தினம் இரவு வந்தார். அவர் கோவில் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

நேற்று அதிகாலை எல்.முருகன் கோவிலுக்குள் சென்று சூரசம்ஹார மூர்த்தி சன்னதியில் சத்ருசம்ஹார பூஜை நடத்தி சிறப்பு வழிபாடு செய்தார். தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள ஆனந்தவிலாச மண்டபத்தில் சத்ருசம்ஹார யாகம் நடத்தினார்.

சாமி தரிசனம்

பின்னர், மீண்டும் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர் மற்றும் அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது பா.ஜ.க. மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொது செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி, திருச்செந்தூர் நகர தலைவர் நவமணிகண்டன், ஆன்மிக மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் வினோத், மாவட்ட சிறுபான்மை பிரிவு அணி தலைவர் ஸ்டீபன் லோபோ, விருந்தோம்பல் பிரிவு மாவட்ட துணை தலைவர் எஸ்.பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story