மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

நாகையில் மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்
வெளிப்பாளையம்:
மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நாகை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.. ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். திட்ட துணை செயலாளர் சிவராஜன், திட்ட துணைத்தலைவர்கள் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் தங்கமணி, துணைத்தலைவர் சிவக்குமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். தொழிற்சங்கங்களை அழைத்து பேசாமல் தன்னிச்சையாக போனஸ் அறிவித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. சி.ஐ.டி.யூ மாவட்ட குழு உறுப்பினர்கள் குருசாமி, மணி, கோட்ட செயலாளர்கள் மணிமேகலை, குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story