மத்திய செயலக அதிகாரிகள் ஆய்வு


மத்திய செயலக அதிகாரிகள் ஆய்வு
x

வாணியம்பாடி நகராட்சி பகுதியில் மத்திய செயலக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பத்தூர்

மத்திய செயலக அலுவலர்களுக்கான பயிற்சி திட்டம் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட பணிகளை மத்திய செயலக அலுவலர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் வாணியம்பாடி நகராட்சியில் அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் குறித்து மத்திய செயலக அலுவலர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவு திட்டத்தின் செயல்முறை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், உணவு தயாரிக்கப்படும் சமையல் அறை, உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினர்.

திட்டம் குறித்து நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் விளக்கி கூறினார். ஆய்வின் போது மாவட்ட அதிகாரிகள், வருவாய்த்துறையினர் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.


Next Story