திருப்பூர் தொழில்பூங்காவை பாா்வையிட்ட மத்திய மந்திரி
திருப்பூர் தொழில்பூங்காவை பாா்வையிட்ட மத்திய மந்திரி
திருப்பூர்
பெருமாநல்லூர்
பெருமாநல்லூர் அருகேயுள்ள நியூ திருப்பூர் நேதாஜி அப்பேரல் பார்க்கில் உள்ள தொழிற்பூங்காவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை மந்திரிபியூஷ் கோயல் மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். பனியன் நிறுவனத்தில் தொழிற்சாலை இயங்கும் முறை, நவீன எந்திரங்களின் பயன்பாடு, தொழிலாளர்கள் நலன் குறித்தும் அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் பிரதமரின் மன்கி பாத் நிகழ்ச்சியை பார்வையிட்டனர். உடன் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, பியோ தலைவர் சக்திவேல் உள்ளிட்ட தொழில் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story