செண்டு பூக்கள் விலை உயர்வு
வேதாரண்யத்தில் செண்டு பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் செண்டு பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
செண்டு பூக்கள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர் பஞ்சநதிக்குளம், நெய்விளக்கு, குரவப்புலம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கரில் செண்டு பூ சாகுபடி நடைபெறுகிறது.நாள் தோறும் இங்கு பூக்கும் செண்டு பூக்கள் கும்பகோணம், தஞ்சாவூர், காரைக்கால், மயிலாடுதுறை, மற்றும் உள்ளூர் பூ வியாபாரி களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இத்தொழிலில் ஏராளமான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக இங்கு விளையும் செண்டு பூ ஒரு கிலோ ரூ.20 முதல் 40 வரை விற்பனையாகும். இந்தநிலையில் தீபாவளியை முன்னிட்டு செண்டு பூக்களின் விலை ஒரு கிலோ ரூ. 120 முதல் முதல் ரூ.150வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனா்.