தூத்துக்குடி மாலை நேர உழவர்சந்தையில் சிறுதானியங்கள் விற்பனை


தூத்துக்குடி மாலை நேர உழவர்சந்தையில் சிறுதானியங்கள் விற்பனை செய்யப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் செயல்படுத்தப்படும் மாலைநேர உழவர் சந்தையில் சிறுதானியங்கள் விற்பனை செய்யப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாலைநேர உழவர்சந்தை

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்படும் தூத்துக்குடி உழவர் சந்தையில் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலான மாலை நேர உழவர் சந்தை செயல்பட அரசு அறிவுறுத்தி உள்ளது.

அப்போது, விவசாயிகளின் சிறுதானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தப்பட உள்ளது.

இலவசமாக பயன்படுத்தலாம்

எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்களின் விளை பொருட்களையும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் விற்பனை செய்ய மாலை நேரத்தில் உழவர் சந்தையை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

இதற்காக தூத்துக்குடி வேளாண்மை துணை இயக்குனரை (வேளாண் வணிகம்) தொடர்பு கொண்டு அடையாள அட்டை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story