அரசு கலைக்கல்லூரியில் விழா
சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் விழா நடந்தது.
சுரண்டை:
சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் முத்தமிழ் விழா, நுண்கலை விழா, ஆண்டு விழா, விளையாட்டு விழா ஆகிய நாற்பெரும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் இரா. சின்னத்தாய் தலைமை தாங்கினார். விளையாட்டுத்துறை பேராசிரியர் மு.மோகன கண்ணன், உடற்கல்வி ஆசிரியர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் திருநாவுக்கரசு வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக தென்காசி எம்.எல்.ஏ. எஸ்.பழனி நாடார், சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டி டிரஸ்ட் நாட்டாமை தங்கையா நாடார், சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன், துணைத்தலைவர் சங்கரா தேவி முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், சுழற்கேடயம் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக கிராமத்து குயில் ஆ.சந்திர புஷ்பம், பேரன்புரூக் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் ஜேம்ஸ் பாண்டியராஜ், முன்னாள் மாணவர் சங்கரன்கோவில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் கண்ணன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சாக்ரடீஸ், ஆய்க்குடி ஜே.பி. கல்லூரி முதல்வர் சுரேஷ் ஜான் கென்னடி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் சிவகுருநாதபுரம் இந்து நாடார் முகமை கமிட்டி உறுப்பினர்கள் சேர்மன் அருணாசலம் எஸ்.கே.டி.ஜெயபால், கிஷோர்குமார், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் வீரபத்திரன் நன்றி கூறினார்.