மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா


மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா
x

வலங்கைமான் அரசு கல்லூரியில் மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா

திருவாரூர்

வலங்கைமான்:

வலங்கைமான் தாலுகாவில் இயங்கிவரும் அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எல்.ஜான்லூயிஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். முதல்வரின் நேர்முக உதவியாளர் வேல்முருகன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கிரிதரன் மாணவர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார். 2022-2023-ம் கல்வி ஆண்டில் இதுவரை தேசிய அளவிலான தொழில் நிறுவனங்களின் பணி இடங்களுக்கான, நேர்காணல் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டு 200 மாணவர்களுக்கு மேல் பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றார். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் ஆரோக்கிய புஷ்பராஜ் செய்திருந்தார். இதில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story