தென்னங்கன்றுகள் வழங்கும் விழா


தென்னங்கன்றுகள் வழங்கும் விழா
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே உள்ள சங்கனாப்பேரி கிராமத்தில் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அருகே உள்ள சங்கனாப்பேரி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர் தலைமை தாங்கி, சங்கனாப்பேரி கிராம பஞ்சாயத்தில் உள்ள 300 பண்ணை குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் 600 தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கினார்.

வாசுதேவநல்லூர் வட்டார உதவி வேளாண்மை இயக்குனர் இளஞ்செழியன், தென்னை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் அம்ரிஷா, பிபினி, காவியா கிருஷ்ணா, கிருஷ்ணப்பிரியா, மனிஷா குளோரா, நஸ்ரின் பாத்திமா, ரோஷினி, சவுமியா, தங்ககீதா ஆகியோர் இணைந்து தென்னை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.

தொடர்ந்து வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர் உணவு மற்றும் நுண்ணூட்ட சத்து வினியோகம் திட்டத்தின் கீழ் சுழற் கலப்பைகளை சங்கனாப்பேரி, திருமலாபுரம் ஆகிய பகுதியைச் சேர்ந்த 2 விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும் திருமலாபுரம் விதைப் பண்ணைகளையும், தென்மலை மற்றும் ராமசாமியாபுரம் பகுதிகளில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி தரிசு நில தொகுப்பு திட்ட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் சவுசல்யா, துணை வேளாண்மை அலுவலர் காசி, உதவி வேளாண்மை அலுவலர்கள் முகம்மது சாகுல் ஹமீது, ஆனந்த், சங்கனாப்பேரி பஞ்சாயத்து தலைவர் சமுத்திரவேல், விவசாய உற்பத்தியாளர் குழு தலைவர் அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story