வகுப்பறையில் அமர்வதற்கு இரும்பு இருக்கைகள் வழங்கும் விழா
திருப்பத்தூர் பகுதியில் 3 பள்ளிகளில் மாணவ, மாணவிகள் வகுப்பறையில் அமர்வதற்கு இரும்பு இருக்கைகள் வழங்கப்படடன.
திருப்பத்தூர் பகுதியில் 3 பள்ளிகளில் மாணவ, மாணவிகள் வகுப்பறையில் அமர்வதற்கு இரும்பு இருக்கைகள் வழங்கப்படடன.
திருப்பத்தூர் தாலுகா ஆதியூர் ஊராட்சி புலிகுட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆதியூர் அரசினர் ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி, ஆலமரத்து வட்டம் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு மாணவ மாணவிகள் வகுப்பறையில் அமர்வதற்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 20 இரும்பு இருக்கைகளை முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான டாக்டர் லீலாசுப்ரமணியம், திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் இணைந்து அந்தந்தப் பள்ளிகளில் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிவலிங்கம், ராமரரெட்டி, ஜெயவேல் தலைமை தாங்கினர். ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். பள்ளிகளுக்கு இரும்பு இருக்கைகளை டாக்டர் லீலா சுப்பிரமணியம், ரோட்டரி சங்க தலைவர் பாரதி, செயலாளர் அருணகிரி, வெங்கடேசன் ஆகியோர் வழங்கி பேசினர். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் முடிவில் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.