விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா
திருமருகலில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா நடந்தது.
நாகப்பட்டினம்
திட்டச்சேரி:
திருமருகல் கால்நடை ஆஸ்பத்திரியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவி ராஜ், உதவி இயக்குனர் அசன் இப்ராகிம் ஆகியோர் தலைமை தாங்கினர்.திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி மருத்துவர் முத்துக்குமரன் வரவேற்றார். இதில் திருமருகல் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த 100 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டது.இதில் கால்நடை உதவி மருத்துவர்கள் சிவகுமார், அருண், சிவப்பிரியா, பெரோஸ் முகமது, ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
---
Related Tags :
Next Story