காப்பாளராக சான்றிதழ் வழங்க பாட்டி கோரிக்கை


காப்பாளராக சான்றிதழ் வழங்க பாட்டி கோரிக்கை
x

காப்பாளராக சான்றிதழ் வழங்க பாட்டி கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ளது காமன்கோட்டை. இந்த ஊர் காலனி தெருவை சேர்ந்தவர் கண்ணம்மாள் (வயது68). இவர் தனது மகன் வழி பேரன், பேத்திகளுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்து கண்ணீர் மல்க மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:- எனது மகன் தர்மலிங்கம் (40) என்பவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். இதன்பின்னர் எனது மருமகள் 4 ஆண்டுகளுக்குமுன் 4 குழந்தைகளில் ஒரு குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு எங்கோ சென்று விட்டார். இதனால் நான் எனது மகனின் பிள்ளைகளான கார்த்திகா (8), லாவண்யா (13), ஜெகதீஷ் குரு (11) ஆகியோரை கவனித்து வருகிறேன். எனது கணவரும் இறந்துவிட்ட நிலையில் 100 நாள் வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருவாயை வைத்து இந்த பிள்ளைகளை வளர்த்து வருகிறேன். எனது பேரன், பேத்திகளுக்கு பள்ளியில் உதவித் தொகை பெற வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும். பெற்றோரை இழந்த இவர்களுக்கு நான்தான் காப்பாளர் என்று சான்றிதழ் வழங்கினால்தான் வங்கி கணக்கு தொடங்கி உதவித்தொகை வழங்க முடியும் என்று கூறிவிட்டனர்.

எனவே, இவர்களுக்கு நான்தான் காப்பாளர் என்று சான்றிதழ் வழங்கி பெற்றோர் இல்லாத இவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு அரசு மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும். இந்த பிள்ளைகளின் கல்வியை தொடர வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.


Next Story