மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
கல்லூரணி கிராமத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
நாலாட்டின்புத்தூர்:
கழுகுமலை அருகே உள்ள கல்லூரணி கிராமத்தில் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பதினெண் சித்தர்கள் மருத்துவ ஆய்விருக்கை சார்பில் 3-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
நிறுவன ஆலோசகர் மற்றும் காப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கவுரவ முனைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக நீதியரசர் பூபாலன், அன்னபூர்ணா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை தலைவர் சதீஷ்குமார், சேர்மன் சுமதி சதீஷ்குமார், இந்திய தரக்குழும திட்ட மதிப்பீட்டாளர் டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து மாணவர்களுக்கு கவுரவ முனைவர் பாலசுப்பிரமணியன் மருத்துவ ஆய்விருக்கை சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள், கிளை மைய பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் செல்வி நன்றி கூறினார்.