150 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்


150 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்
x

கோடைக்கால பயிற்சி முகாமில் பங்கேற்ற 150 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள சிறு விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

இவ்வாறு பயிற்சி பெற்ற 150 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் அவர்கள் கலந்துகொண்டு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சேதுராஜன், ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியாவிக்டர், துணை தலைவர் பெ. இந்திராபெரியார்தாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story