அழகுக்கலை பயிற்சி பெற்ற கைதிகளுக்கு சான்றிதழ்


அழகுக்கலை பயிற்சி பெற்ற கைதிகளுக்கு சான்றிதழ்
x

வேலூர் பெண்கள் ஜெயிலில் அழகுக்கலை பயிற்சி பெற்ற கைதிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

வேலூர்

வேலூர் தொரப்பாடியில் உள்ள பெண்கள் தனிச்சிறையில் பெண் கைதிகளுக்கு ஒரு மாதம் அழகுகலை குறித்த பயிற்சி நடைபெற்றது. இதில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

பயிற்சியின் நிறைவு விழா ஜெயிலில் நடந்தது. சிறைத்துறை டி.ஐ.ஜி. ராஜலட்சுமி தலைமை தாங்கினார். ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தாட்கோ இயக்குனர் கந்தசாமி கலந்துகொண்டு, பயிற்சி பெற்ற கைதிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும், அவர்களின் விடுதலைக்கு பின்னர் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் மற்றும் பயிற்சிக்கு பிறகு வேலை வாய்ப்புகள் பெற்று தரப்படும் என்று கூறினார். மேலும் விடுதலைக்கு பிறகு வேலை வாய்ப்பிற்கு உத்திரவாதம் ஏற்படுத்தும் விதமாக ராணிப்பேட்டையில் உள்ள அழகு நிலையத்தில் பணிபுரிவதற்கான பயிற்சி சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.


Next Story