தாமலேரிமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு சான்றிதழ்


தாமலேரிமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு சான்றிதழ்
x

தாமலேரிமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே பாச்சல் கிராமத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தேசிய கொடி ஏற்றி வைத்து, மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த விழாவில் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், தாமலேரிமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதா இளங்கோ ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து சிறப்பாக பணி செய்தமைக்காக நற்சான்றிதழை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயகுமாரி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story