பயிற்சி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு சான்றிதழ்
பயிற்சி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு சான்றிதழ்
தலைஞாயிறு பேரூராட்சி திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், வட்டார ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார். கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றி செல்வன், தலைஞாயிறு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமுத்து, அண்ணாத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பிரவின்ராஜ் வரவேற்றார். இந்த பயிற்சி முகாமில் மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தலைஞாயிறு, கீழையூர், வேதாரண்யத்தை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் பயிற்சி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் ஊராட்சிகளின் மாவட்ட வள மைய அலுவலர் உமா, பயிற்றுனர்கள் கலா, சுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.