3 டாக்டர்கள், செவிலியருக்கு பாராட்டு சான்றிதழ்
சோளிங்கர் அரசு மருத்துவமனையில் 3 டாக்டர்கள், செவிலியருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்
ராணிப்பேட்டை
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின விழா கலெக்டர்பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பல்வேறு துறைகளில் சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய நவீன் மயக்கவியல் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர்கள், பாபு, இளங்கோவன், ஆய்வுக்கூட நுட்பனர் சரவணன் மற்றும் செவிலியர் பிரபாவதி உள்ளிட்ட 5 பேருக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
பாராட்டு சான்றிதழ் பெற்ற டாக்டர்கள், செவிலியரை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story