மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பாராட்டு சான்றிதழ்
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பாராட்டு சான்றிதழ்
நீலகிரி
ஊட்டி
தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சிறந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட 9 சமுதாய அமைப்புகளை சேர்ந்த சுய உதவிக்குழுக்களுக்கு மொத்தம் ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது. மேலும் அந்த குழுக்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இதில் மகளிர் திட்ட இயக்குனர் பாலகணேஷ், உதவி திட்ட அலுவலர் ஜெயராணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story