யோகா பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள்
யோகா பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள்
நீலகிரி
கூடலூர்
கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் தொழிற்பயிற்சி பயிலும் மாணவர்களுக்கு யோகா அடிப்படை உடற்பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 20 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி தொழிற் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் மைய முதல்வர் ஷாஜி எம்.ஜார்ஜ் வரவேற்றார். தொடர்ந்து பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பின்னர் இளம் தலைமுறையினர் உடல்நலம், மனவளம், உயிர்வளம் காக்கும் யோகா பயிற்சிகளை முறையாக கற்றுக்கொண்டு தொடர்ந்து பயிற்சிகளை செய்து வந்தால் எதிர்காலத்தில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் செயல்பட முடியும். மேலும் சிந்தனை மற்றும் செயல் திறன்களை வளர்த்து கொள்ளலாம் என்று அறிவுரை வழங்கப்பட்டது. இதில் பயிற்சி மைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story