கல்லூரி ஆசிரியரிடம் சங்கிலி பறிப்பு


கல்லூரி ஆசிரியரிடம் சங்கிலி பறிப்பு
x

நெல்லையில் கல்லூரி ஆசிரியரிடம் சங்கிலி பறித்துச் சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள ராஜபாளையத்தை சேர்ந்தவர் அந்தோணி. இவரின் மகன் லியோனிட் (வயது 34). இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் தூத்துக்குடியில் இருந்து பஸ் ஏறி தூத்துக்குடி- நெல்லை பைபாசில் உள்ள அரியகுளம் அருகே இறங்கினார். அங்கு இருந்து கிருஷ்ணாபுரம் செல்ல ஒரு நபரிடம் லிப்ட் கேட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அந்த நபர் லியோனிட்டை மாற்று பாதையில் அழைத்து செல்வதாக கூறி ஆள் இல்லாத இடத்துக்கு அழைத்துசென்றார். பின்னர் அந்த நபர் அங்கு பதுங்கி இருந்த தனது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து லியோனிட் அணிந்து இருந்த 11 கிராம் தங்க சங்கிலி, ஒரு செல்போன், ரூ.400 ஆகியவற்றை பறித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story