ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
தஞ்சையில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர், மே.29-
தஞ்சையில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
6 பவுன் சங்கிலி பறிப்பு
தஞ்சை முனிசிபல் காலனி இந்திரா நகரை சேர்ந்தவர் அருண்பாண்டியன். இவருடைய மனைவி திலகவதி(வயது 27). இவர் சம்பவத்தன்று தனது குழந்தையுடன் ஸ்கூட்டரில் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். இந்திரா நகரை அவர் நெருங்கிய போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர் ஒருவர் திலகவதியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்து தப்பி சென்றார்.
போலீசில் புகார்
இதில் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன் திருடன் என்று சத்தம் போட்டு கொண்டே தனது ஸ்கூட்டரில் விரட்டினார். ஆனால் அந்த மர்மநபரை பிடிக்க முடியவில்லை.இதுகுறித்து அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகிறார்.