உடுமலையில் மளிகை பொருட்கள் கொண்டு வந்திருப்பதாக கூறி வீட்டுக்குள் நுழைந்து பெண்ணின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

உடுமலையில் மளிகை பொருட்கள் கொண்டு வந்திருப்பதாக கூறி வீட்டுக்குள் நுழைந்து பெண்ணின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
x

உடுமலையில் மளிகை பொருட்கள் கொண்டு வந்திருப்பதாக கூறி வீட்டுக்குள் நுழைந்து பெண்ணின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர்

போடிப்பட்டி

உடுமலையில் மளிகை பொருட்கள் கொண்டு வந்திருப்பதாக கூறி வீட்டுக்குள் நுழைந்து பெண்ணின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தனியாக இருந்த பெண்

உடுமலை வி.வி.லே.அவுட் பகுதியை சேர்ந்த ரமேஷ்பாபு என்பவரது மனைவி நாகலட்சுமி (வயது 55). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது ஒரு ஆசாமி அங்கு வந்து 'உங்களுக்கு வரவேண்டிய மளிகைப் பொருள் வேறு முகவரிக்கு மாறிச் சென்று விட்டது. அதை நான் போய் எடுத்து வருகிறேன்' என்று கூறியுள்ளார். மேலும் நாகலட்சுமியிடம் தண்ணீர் கேட்டு வாங்கி குடித்த அந்த ஆசாமி வீட்டில் நாகலட்சுமி தனியாக இருப்பதை நன்கு நோட்டமிட்டுள்ளார்.

அதன்பின்னர் அரை மணி நேரம் கழித்து மீண்டும் கையில் ஒரு அட்டைப்பெட்டியுடன் அங்கு வந்த அதே ஆசாமி உங்களுக்கான மளிகைப்பொருட்களை கொண்டு வந்துள்ளேன் என்று நாகலட்சுமியிடம் கூறியுள்ளார். அதை முன் வாசலிலேயே இறக்கி வைக்குமாறு நாகலட்சுமி தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த ஆசாமி அதிக கனமாக இருக்கிறது. நானே உள்ளே கொண்டு வந்து வைத்து விடுகிறேன் என்று கூறியதுடன் சமையலறையில் கொண்டு வந்து பெட்டியை வைத்துள்ளார்.

நகை பறிப்பு

பின்னர் திடீரென்று நாகலட்சுமியை தள்ளி விட்ட அந்த ஆசாமி அவருடைய கழுத்திலிருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு வெளியே ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நாகலட்சுமி கூச்சல் போட்ட படி வெளியே ஓடி வருவதற்குள் அந்த ஆசாமி அங்கிருந்து தப்பி விட்டார்.உடனடியாக வீட்டுக்குள் வந்து அட்டைப் பெட்டியைத் திறந்து பார்த்த போது அது வெறும் காலி பெட்டி என்று தெரிய வந்தது. இதுகுறித்து நாகலட்சுமி அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகைப் பொருட்கள் கொண்டு வந்ததாகக் கூறி நூதன முறையில் தங்க சங்கிலி பறித்துச் சென்றவரை வலை வீசி தேடி வருகிறார்கள்.

Next Story