செவிலியரிடம் சங்கிலி பறிப்பு
செவிலியரிடம் சங்கிலி பறிக்கப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அ.மேட்டூரை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ரஞ்சிதா (வயது 20). செவிலியரான இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வருகிறாா். நேற்று இரவு 8.30 மணியளவில் ரஞ்சிதா பணி முடிந்து வீட்டிற்கு செல்ல பஸ் ஏறுவதற்காக நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் காய்கறிகள் வாங்க சென்றார். அந்த வழியாக ரஞ்சிதாவை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் ரஞ்சிதாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ரஞ்சிதா பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Related Tags :
Next Story