சங்கிலி வீரன் கோவில் குடமுழுக்கு


சங்கிலி வீரன் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 8:21 AM IST)
t-max-icont-min-icon

காரப்பிடாகை சங்கிலி வீரன் கோவில் குடமுழுக்கு நடந்தது.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

திருப்பூண்டி அருகே உள்ள காரப்பிடாகை வடக்கு தெற்குதெருவில் சங்கிலி வீரன் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து சென்று கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ஆனந்த், வினோத், வீரராகவன், கார்த்திகேசன், செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story