உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டத்திற்கு ரூ.54 லட்சம் செலவில் புதியதாக செய்யப்பட்ட தேர், நிலைக்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது. உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைத்ததும் புதிய தேர் வெள்ளோட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டத்திற்கு ரூ.54 லட்சம் செலவில் புதியதாக செய்யப்பட்ட தேர், நிலைக்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது. உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைத்ததும் புதிய தேர் வெள்ளோட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உடுமலை
உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டத்திற்கு ரூ.54 லட்சம் செலவில் புதியதாக செய்யப்பட்ட தேர், நிலைக்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது. உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைத்ததும் புதிய தேர் வெள்ளோட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாரியம்மன் கோவில்
உடுமலையில் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் அமாவாசை தினத்தை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா, நோன்பு சாட்டப்பட்டு 15-வது நாளில் தேரோட்டம் நடைபெறும். இந்த தேர் கோவிலின் தேர்நிலையில் இருந்து புறப்பட்டுபழனிசாலை,
தளிசாலை, வடக்குகுட்டை வீதி, சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடைவீதி, கொல்லம்பட்டறை, பொள்ளாச்சி சாலை வழியாக நிலையை வந்தடையும். தேரை பக்தர்கள் முன்னாலிருந்து இழுத்து செல்ல, தேரை பின்னாலிருந்து யானை தள்ளி செல்லும். இதுவரை பயன்பாட்டில் இருந்து வந்த தேர் சதுர வடிவில் மரத்தினால்ஆனது. சக்கரங்கள் மட்டும் இரும்பால் ஆனது.
இந்த கோவிலில் இருந்த மிகவும்பழமை வாய்ந்ததேருக்கு பதிலாக புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. 5 நிலைகளை கொண்ட இந்த புதிய தேரின் மொத்த உயரம் 12½ அடி.இதில் தேர்பலகை மட்டும் 9¾ அடியாகும். அதற்கு மேல் உற்சவர் உட்காரும் சிம்மாசனம் 2¾ அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேருக்கு 780 கன அடி இலுப்ப மரமும், 20கனஅடி தேக்கு மரமும்பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேரின் வெளிப்புறத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன், அம்மன் தளங்கள் குறித்த வரலாற்று சிற்பங்கள் மற்றும் சிவன், மகாவிஷ்ணு, விநாயகர், முருகர் சிற்பங்கள் என மொத்தம் 220சிற்பங்கள் இடம்பெற்றுள்ளது.இதுதவிர 120 போதியல் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளது.
புதிய தேர் நிலையில் நிறுத்தம்
இந்த புதிய தேர் கட்டுமானப்பணிகள் உடுமலை தாராபுரம் சாலையில் உள்ள இடத்தில், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் கவுதம் கைவினைத்தொழிலகம் ஸ்தபதி சி.வரதராஜன் தலைமையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகநடைபெற்று வந்தது. தேர்பணிகளில், மரத்தில் மிக நுணுக்கமாக செய்ய வேண்டிய அழகிய சிற்பங்களும் வடிவமைக்கப் பட்டுள்ளது. உடுமலை மாரியம்மன் கோவில் சார்பில் ரூ.53லட்சத்து85ஆயிரம் செலவில் இந்த புதிய தேர், எண்கோண வடிவில் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய தேர் 42 டன்கள் எடை கொண்டது. இந்த புதிய தேருக்கு, இரும்பாலான அச்சு சக்கரங்கள் மட்டும் பழைய தேரில் இருந்த சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய தேர் செய்யும் பணிகளில், தேரோட்டத்தின்போதுசுவாமியுடன் அம்பாள் அமரும் இடமான பத்மாசனம் வரை 100சதவீத பணிகள் நிறைவடைந்ததைத்தொடர்ந்து இறுதியாக கடந்த மாதம் (நவம்பர்) 10-ம்தேதி தேரின் மையப் பகுதியில் நெஞ்சாணி பொருத்தும் பணிகள் நடந்தது. இதைத்தொடர்ந்து, கோவிலுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழமை வாய்ந்த தேர் அங்கிருந்து திருப்பூர் சாலைப்பகுதியில் உள்ள இடத்திற்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விரைவில் வெள்ளோட்டம்
தேர்நிலைக்கு கொண்டு வந்து நிறுத்துவதற்கான நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.அதிகாலையில், புதிய தேருக்கு பூர்வாங்க பூஜைகள் நடந்தது.இதைத்தொடர்ந்து தேரை, நிலைக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு புதிய தேருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.மேலும் தேர்நிலை பகுதியில் உள்ள தேரடி கருப்பர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
அறநிலையத்துறை உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைத்ததும், புதிய தேர் வெள்ளோட்டத்தை நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு (2023) முதல்தேர்த்திருவிழா தேரோட்டத்தில் இந்த புதிய தேர் இடம்பெறும்.