வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நகரசபை தலைவர் மன்னை சோழராஜன் ஆய்வு
வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை நகரசபை தலைவர் மன்னை சோழராஜன் ஆய்வு செய்தார்.
மன்னார்குடி 6-ம் எண் வாய்க்கால் பகுதியில் இருந்து தொடங்கி முல்லை நகர், கொத்தவல்லி அம்மன் நகர், ஆர்பி.சிவம் நகர் பகுதி வழியாக சென்று பாமணி ஆறு வரை உள்ள வடிகால் வாய்க்காலை தூர்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனை நகராட்சி தலைவர் மன்னை சோழராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- நகரில் முக்கியமான பகுதிகளில் மழைநீர் வடிவதற்கு ஏதுவாக இந்த முக்கிய வடிகால்வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளது. மேலும் இந்த வாய்க்கால் அம்மாகுளம் மற்றும் ராவணன் குளம் ஆகிய குளங்களுக்கும் நீர் வழி வாய்க்கால் ஆகும். இனி குளங்களில் தடையின்றி நீர் நிரம்பவும் வழி ஏற்பட்டுள்ளது. பணியை விரைந்து செய்த அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்' என்றார். அப்போது நகராட்சி துணைத்தலைவர் கைலாசம், நகராட்சி பொறியாளர் குணசேகரன், நகரமைப்பு ஆய்வாளர் விஜயகுமார், நகரசபை உறுப்பினர் திருச்செல்வி, சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.