நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தலைவர் ஆய்வு


நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தலைவர் ஆய்வு
x

நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தலைவர் ஆய்வு செய்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் மாநில நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தின் தலைவர் சுப்பையா ஆய்வு செய்தார். முன்னதாக அவரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மகாலட்சுமி, மாவட்ட நுகர்வோர் ஆணைய நீதிபதி ராமராஜ் உள்ளிட்ட பலர் வரவேற்றனர். மேலும் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சி திட்டத்தின் தொடக்க விழா நடந்தது. இதில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணைய நீதிபதி ராமராஜ் பேசுகையில், நுகர்வோர் பாதுகாப்பு பயிற்சி பட்டறைகளை நடத்தும் திட்டமானது தமிழகத்திலேயே முதல் முறையாக அரியலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ஓராண்டு காலத்தில் 10 ஆயிரம் பேருக்கு பயற்சி வழங்கப்படவுள்ளது, என்றார்.


Next Story