நிரந்தர சோதனைச்சாவடி அமைக்க வேண்டும்


நிரந்தர சோதனைச்சாவடி அமைக்க வேண்டும்
x
திருப்பூர்


புதுப்பாளையம் அருகே திருப்பூர் மாவட்ட எல்லையில் நிரந்தரமாக சோதனைச்சாவடி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சோதனை சாவடி

பொள்ளாச்சி- தாராபுரம் மாநில நெடுஞ்சாலையும், உடுமலை- செஞ்சேரிமலை சாலையும் சந்திக்கும் முக்கிய இடமாக பெதப்பம்பட்டி உள்ளது.கரூரில் இருந்து தாராபுரம், குடிமங்கலம், பெதப்பம்பட்டி வழியாக தினமும் கேரளாவிற்கு காய்கறிகள் மற்றும் உணவுப் பொருள்களுடன் சரக்கு வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றனபெதப்பம்பட்டியை சுற்றிலும் காற்றாலைகள்இயங்கி வருவதால் இருசக்கரவாகனங்கள் மட்டுமின்றி கனரகவாகனங்கள் அதிகளவில்சென்றுவருகின்றன.

போக்குவரத்து நெருக்கடி உள்ள சாலையில் புதுப்பாளையம் அருகே திருப்பூர் மாவட்ட எல்லையில் தற்காலிகமாக சோதனை சாவடி இயங்கி வந்தது. கொரோனா காலங்களில் செயல்பட்டு வந்த சோதனைச் சாவடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக சரிந்து விழுந்தது அதன் பிறகு சோதனை சாவடி அமைக்கப்படவில்லை.

கோரிக்கை

பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை 7 மீட்டரிலிருந்து 2.5 மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.இருவழிப் பாதையாக இருந்தது நான்கு வழி சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் இருந்து குடிமங்கலம் வழியாக தாராபுரம் செல்லும் பேருந்துகள் மட்டுமின்றி தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

மாநில நெடுஞ்சாலை என்பதால் விபத்துக்களை ஏற்படுத்தும் வாகனங்களை எளிதில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், விபத்துக்களை உடனடியாக தெரிந்து கொண்டு முதலுதவி சிகிச்சை அளிக்க முடியும். குற்றங்களை தடுக்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியை நிரந்தரமாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story