வரதராஜ பெருமாள் கோவிலில்  சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா


வரதராஜ பெருமாள் கோவிலில்  சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா
x

வரதராஜ பெருமாள் கோவிலில்  சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா நடந்தது.

இதில் பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள், லட்சுமி, கல்யாண லட்சுமி, நரசிம்ம பெருமாள், ராமர், லட்சுமணர், சீதாதேவி, ஆண்டாள், நாச்சியார் ஆகிய சாமிகளுக்கு திருமஞ்சனம், அலங்காரம் நடந்தது.

சக்கரத்தாழ்வார் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீரங்க சடகோப கைங்கரிய சபா நிர்வாகி பாலாஜி பட்டர், வேங்கடநாதன் பட்டர் ஆகியோர் சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவை மூலம் சிறப்பு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்தனர்.

பின்னர் பக்தி பாடல் பாடப்பட்டது. அனைவருக்கும் சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி அளவில் சுவாதி நட்சத்திரம் மகாயாகம் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.


Next Story