தமிழகத்தில் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு -  வானிலை ஆய்வு மையம்
x

4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

சென்னை,

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,தமிழ்நாடு ,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 14ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .


Next Story