தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் .
சென்னை ,
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ,தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் 15ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
மேலும் தமிழகத்தில் நாளை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது .சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் .நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
Related Tags :
Next Story