இ-சேவை மையம் தொடங்க வாய்ப்பு


இ-சேவை மையம் தொடங்க வாய்ப்பு
x
தினத்தந்தி 29 March 2023 7:30 PM GMT (Updated: 29 March 2023 7:30 PM GMT)

நாகை மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க விரும்புபவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க விரும்புபவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இ-சேவை மையம்

தமிழகத்தில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்கள் நிறுவி செயல்படுத்த, இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி அரசின் இணையவழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கமானது இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.

விண்ணப்பிக்கலாம்

அதன்படி இ-சேவை மையம் தொடங்க விரும்புபவர்கள், இ-சேவை இணையதளம் www.tnesevai.tn.gov.in/www.tnega.tn.gov.in-ல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ந் தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம். அவர்களுக்குரிய பயனர் எண் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலமாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story