சந்தனமாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
களக்காடு சந்தனமாரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
களக்காடு:
களக்காடு கோட்டை விஸ்வகர்மா தெருவில் விஸ்வகர்மா சமு தாயத்திற்கு பாத்தியப்பட்ட அக்கசாலை விநாயகர் மற்றும் சந்தனமாரி அம்மன் கோவிலில் கடந்த மாதம் புதிதாக புனரமைப்பு பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகள் நடந்தது. பணிகள் நிறைவடைந்ததையடுத்து 21-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, மஹாலட்சுமி வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது.
இதையொட்டி கோ பூஜை, நவக்கிரஹ ஹோமம், கணபதி மந்திர ஹோமம், சத்திய வாகீஸ்வரர் கோமதி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், கும்ப அலங்காரம், யாகசாலை பூஜைகள், தீபாராதனை, திருமுறை பாராயணம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது.
தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, மஹா பூர்ணாகுதி, தீபாராதனை நடத்தப்பட்டு கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வந்தது. பின்னர் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பல்வேறு புன்னிய ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. திசையன்விளை சங்கரநாராயணன் அய்யர் கும்பாபிஷேகத்தை நடத்தினார்.