சந்தனமாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா
பண்ணாள் சக்கரம்பேட்டை சந்தனமாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா நடந்தது.
நாகப்பட்டினம்
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த பண்ணாள் சக்கரம்பேட்டை பகுதியில் சந்தனமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா நடைபெற்று வந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. முன்னதாக சாமிக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர், நெய், தேன், திருநீறு உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சந்தனமாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதை தொடர்ந்து மஞ்சள் விளையாட்டு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story