ஓசூர் முத்துமாரியம்மன் கோவிலில் உலக நலனுக்காக சண்டி யாகம்
ஓசூர்:-
ஓசூர் முத்துமாரியம்மன் கோவிலில் உலக நலனுக்காக சண்டி யாகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள்.
சண்டி யாகம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகில் சர்வீஸ் ரோடு மாருதி நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு உலக நலனுக்காக மகா சண்டி யாகம் 2 நாட்கள் நடந்தது. முதல்நாள் கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை மற்றும் சிறப்பு பூஜைகளுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
நேற்று சிகர நிகழ்ச்சியாக மகா சண்டியாகம் நடந்தது. கோவில் அருகில் பெரிய அளவிலான யாக குண்டம் அமைக்கப்பட்டு அதில் நெய் ஊற்றியும், பூஜை பொருட்கள், மங்கள திரவியங்கள் சமர்ப்பித்து சண்டி யாகம் நடத்தப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் யாகத்தை நடத்தினர்.
சிறப்பு அலங்காரம்
தொடர்ந்து கலசாபிஷேகம், சாமி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஓசூர் கோவில் செய்திக்கான கூடுதல் போட்டோ
ஓசூர் முத்துமாரியம்மன் கோவில் செய்திக்கான கூடுதல் போட்டோ இணைக்கப்பட்டுள்ளது.