நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான்-3 லேண்டர்..! சாதித்தது இந்தியா..!


நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான்-3 லேண்டர்..! சாதித்தது இந்தியா..!
x
தினத்தந்தி 23 Aug 2023 12:35 AM GMT (Updated: 24 Aug 2023 7:48 AM GMT)



Live Updates

  • 23 Aug 2023 6:20 PM GMT

    விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவரை தரையிறக்கும் பணி தொடக்கம்

    நிலவில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து ரோவரை தரையிறக்கும் பணி தொடங்கி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் தரையிறங்கும் ரோவர் 14 நாட்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது. லேண்டரில் இருந்து மெல்ல தரையிறங்கும் பிரக்யான் ரோவர், முதலில் தன்னை சுமந்த விக்ரமை படமெடுக்க உள்ளது. முன்னதாக விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது, நிலவில் புழுதி படலம் ஏற்பட்டது. அது அடங்கிய பின்னர், லேண்டரில் இருந்து ரோவர் வெளிவந்து ஆய்வு பணியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • நிலவில் தடம் பதித்த லேண்டர்; புகைப்படம் வெளியீடு
    23 Aug 2023 4:09 PM GMT

    நிலவில் தடம் பதித்த லேண்டர்; புகைப்படம் வெளியீடு

    நிலவில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பின்னர் அதன் லேண்டிங் இமேஜர் கேமரா எடுத்த புகைப்படம் ஒன்றை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது. அதில், நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய ஒரு பகுதி காட்டப்பட்டு உள்ளது. லேண்டரின் ஒரு கால் பகுதியின் நிழலும் காணப்படுகிறது.

  • இஸ்ரோ தலைவருக்கு தொலைபேசி வழியே வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
    23 Aug 2023 1:44 PM GMT

    இஸ்ரோ தலைவருக்கு தொலைபேசி வழியே வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

    நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் வெற்றியை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் பிரதமர் மோடி, இஸ்ரோ தலைவர் சோம்நாத் உடன் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

  • 23 Aug 2023 12:46 PM GMT

    நம் கண் முன்னே இந்தியா வல்லரசாகி உள்ளது. இந்த நாளை நாடு எப்போதும் நினைவில் வைத்திருக்கும்- பிரதமர் மோடி

  • 23 Aug 2023 12:42 PM GMT

    இந்தியா நிலவில் காலடி பதித்துள்ளது, ஒட்டுமொத்த மக்களையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்

  • நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர்... விண்வெளி துறையில் வல்லரசான இந்தியா
    23 Aug 2023 12:40 PM GMT

    நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர்... விண்வெளி துறையில் வல்லரசான இந்தியா

    பூமியின் துணைக்கோளான நிலவு (சந்திரன்) பற்றிய ஆராய்ச்சியில், ரஷியா, அமெரிக்கா, சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக, முன்னணியில் உள்ள இந்தியா இதுவரை, சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகிய இரண்டு விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி, அங்கு தண்ணீர் உள்ளது என உறுதி செய்துள்ளது.

    தற்போது, நிலவின் தென் துருவத்தில், இதுவரை யாரும் ஆய்வு செய்யாத இடத்தில், தடம் பதிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு, கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்பட்டது.

    பூமிக்கும், நிலவுக்கும் இடையேயுள்ள 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ. தொலைவை 40 நாட்கள் பயணித்து கடக்கும் திட்டத்துடன் புறப்பட்ட சந்திரயான்-3, முதலில் புவி வட்டப்பாதையில் பல்வேறு நிலைகளில் சுற்றிவந்து, பிறகு நிலவு நோக்கி பயணித்து, அதன் வட்டப்பாதைக்கு மாற்றப்பட்டது.

    நிலவு வட்டப்பாதையில் சுற்றி கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டர் கருவி வெளியே கொண்டுவரப்பட்டு, அதே வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டே நிலவை நெருங்கி சென்றது. நிலவை தொட்டுவிடும் தூரத்தில் லேண்டர் கருவி சுற்றி வந்தது.

    சரியாக, இன்று மாலை 6 மணி 4 நிமிடத்துக்கு நிலவில் தரை இறக்கப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் முன்பே தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் நிகழ்வை இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நேரலையாக ஒளிபரப்பும் நிகழ்ச்சி மாலை 5.22 மணியில் இருந்து தொடங்கியது. விண்வெளியில் சாதனை படைக்கும் இந்தியாவின் முயற்சியின் முக்கிய பகுதியாக, நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் நிகழ்வு அமைந்துள்ளது.

    இதன்பின்னர், மாலை 5.46 மணியளவில் விக்ரம் லேண்டரை நிலவின் தரை பகுதியில் இறக்கும் கட்டம் தொடங்கியது என இஸ்ரோ அறிவித்தது.

    விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டது. தானாக தரையிறங்கும் திட்ட நிகழ்வு (ஏ.எல்.எஸ்) தொடங்கப்பட்டது. இதனால், லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு நடந்தது. இதன்பின்னர், நிலவில் எந்த பகுதியில் தரையிறங்குவது என்ற பகுதியை லேண்டர் தேர்வு செய்தது. பின்னர் தரையிறங்கியது. விண்வெளி துறையில் இந்தியா வல்லரசாகி உள்ளது.

    அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவை தொடர்ந்து இந்த சாதனையை படைத்த 4-வது நாடாக இந்தியா உருவாகி உள்ளது. எனினும், நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கிய உலகின் ஒரே நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

  • 23 Aug 2023 12:37 PM GMT

    சந்திரயான்-3 லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை, தென் ஆப்பிரிக்காவில் இருந்து பிரதமர் மோடி நேரலையில் பார்த்தார். லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதும், அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

  • 23 Aug 2023 12:34 PM GMT

    தரையிறங்குவதற்கான இடத்தை லேண்டர் தேர்வு செய்து தரையிறங்கியது. இதனையடுத்து விஞ்ஞானிகள் உற்சாகமடைந்தனர். ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.

  • 23 Aug 2023 12:32 PM GMT

    நிலவில் இருந்து 100 மீட்டர் தொலைவில் லேண்டர் உள்ளது

  • 23 Aug 2023 12:31 PM GMT

    நிலவில் தரையிறங்குவதற்கான இடத்தை லேண்டர் தேர்வு செய்கிறது.


Next Story