மாவட்டத்தில் போலீஸ் தனிப்பிரிவில் அதிரடி மாற்றம்


மாவட்டத்தில் போலீஸ் தனிப்பிரிவில் அதிரடி மாற்றம்
x
தினத்தந்தி 4 Jun 2023 12:15 AM IST (Updated: 4 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் போலீஸ் தனிப்பிரிவில் அதிரடி மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர்

மாவட்டத்தில் போலீஸ் தனிப்பிரிவில் அதிரடி மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

பணியிடமாற்றம்

போலீஸ் தனி பிரிவில் விருதுநகர் மேற்கில் பணியாற்றிய பாலமுருகன் விருதுநகர் பஜார் போலீஸ் நிலையத்திற்கும், புறநகரில் பணியாற்றிய மந்திரமூர்த்தி வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கும், சூலக்கரையில் பணியாற்றிய ஆனந்தகுமார் விருதுநகர் பஜார் போலீஸ் நிலையத்திற்கும், வச்சக்காரப்பட்டியில் பணியாற்றிய சுந்தரமூர்த்தி சூலக்கரை போலீஸ் நிலையத்திற்கும், சிவகாசி டவுன் போலீஸ் நிலைய தனி பிரிவில் பணியாற்றிய செல்வராஜ் சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்திற்கும், மாரனேரியில் பணியாற்றிய கோபால்சாமி சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்திற்கும், கிழக்கில் பணியாற்றிய சக்திவேல் திருத்தங்கல் போலீஸ் நிலையத்திற்கும், அருப்புக்கோட்டை கோட்டத்தில் பணியாற்றிய மணிவண்ணன் அருப்புக்கோட்டை டவுன் போக்குவரத்து பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ராஜேஷ் கண்ணன் நரிக்குடி போலீஸ் தனி பிரிவிற்கும், அருப்புக்கோட்டை தாலுகாவில் பணியாற்றிய ராஜ்குமார் பந்தல்குடிக்கும், காரியாபட்டியில் பணியாற்றிய தங்கபாண்டியன் ஆவியூருக்கும், ராஜபாளையம் தெற்கில் பணியாற்றிய ராஜகோபால் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவுக்கும், ராஜபாளையம் வடக்கில் பணியாற்றிய மாரியப்பன் ராஜபாளையம் டவுன் போக்குவரத்து பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

தனிப்பிரிவு

கீழ ராஜகுலராமனில் பணியாற்றிய கந்தசாமி ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கும், சேத்தூரில் பணியாற்றிய அரிச்சந்திரன் சேத்தூர் போலீஸ் நிலையத்திற்கும், தளவாய்புரத்தில் பணியாற்றிய ஜெயராமன் சேத்தூர் போலீஸ் நிலையத்திற்கும், சாத்தூர் தாலுகா போலீசில் பணியாற்றிய அருண்குமார் இருக்கன்குடிக்கும், கிருஷ்ணன்கோவில் போலீஸ் தனி பிரிவில் பணியாற்றிய சுந்தரராஜ் கிருஷ்ணன்கோவில் போலீஸ் நிலையத்திற்கும், வீரசோழன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய கார்மேக கண்ணன் ஏ.முக்குளத்துக்கும், நரிக்குடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய நடராஜ் காரியாபட்டி தனி பிரிவுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சுப்பையா வத்திராயிருப்புக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர் கூடுதலாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்ட தனி பிரிவையும் கவனிப்பார்.

விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு பழனிகுமார் விருதுநகர் மேற்கு தனிப்பிரிவிற்கும், ஆமத்தூரில் பணியாற்றும் ஏட்டு செந்தில் விநாயகம் விருதுநகர் பாண்டியன் நகர் தனிப்பிரிவுக்கும், விருதுநகர் பாண்டியன்நகர் முதல் நிலை காவலர் மாரிசெல்வம் சூலக்கரை தனிப்பிரிவிற்கும், விருதுநகர் மேற்கில் பணியாற்றும் ஏட்டு ராஜமாணிக்கம் வச்சகாரப்பட்டி தனிப்பிரிவிற்கும், சிவகாசி கிழக்கில் பணியாற்றும் ஏட்டு தங்கப்பாண்டி சிவகாசி தனிப்பிரிவிற்கும், மாரனேரியில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லிங்கதுரை மாரனேரி தனிப்பிரிவிற்கும், திருத்தங்கல் ஏட்டு விஜயன் சிவகாசி கிழக்கு தனிப்பிரிவுக்கும், காரியாபட்டியில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தவமணி அருப்புக்கோட்டை கோட்ட தனிப்பிரிவிற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நியமனம்

பந்தல்குடியில் பணியாற்றும் கணேஷ் பிரபு அருப்புக்கோட்டை டவுன் தனிப்பிரிவுக்கும், அருப்புக்கோட்டை டவுனில் பணியாற்றும் ஏட்டு ஜெகன் பிரசாத் அருப்புக்கோட்டை தாலுகா தனிப்பிரிவிற்கும், ராஜபாளையம் வடக்கில் பணியாற்றும் ஏட்டு செல்வகுமார் ராஜபாளையம் தெற்கு தனிப்பிரிவிற்கும், ராஜபாளையம் நகர் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் மாரிக்கனி ராஜபாளையம் வடக்கு தனி பிரிவுக்கும், ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ் கீழ ராஜகுலராமன் தனிப்பிரிவுக்கும், சேத்தூரில் பணியாற்றும் ஏட்டு முத்துக்குமார் சேத்தூர் தனி பிரிவிற்கும், தளவாய்புரத்தில் பணியாற்றும் ஏட்டு ஆரோக்கியம் தளவாய்புரம் போலீஸ் தனிப்பிரிவுக்கும், அம்மாபட்டியில் பணியாற்றும் ஏட்டு குணசேகரன் சாத்தூர் தாலுகா தனி பிரிவிற்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் தங்கமாரியப்பன் கிருஷ்ணன் கோவில் தனிப்பிரிவிற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story