ரெயில் சேவையில் மாற்றம்
ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் யார்டு மற்றும் திருச்சி கோட்டத்தின் பிற பகுதிகளில் பராமரிப்பு காரணமாக ரெயில்சேவைகளின் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வண்டி எண் 06880 திருச்சி காரைக்கால் வரை செல்லும் முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரெயில் திருச்சியில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு தஞ்சை வரை இயங்குகிறது. இந்த ரெயில் தஞ்சை - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கமாக வண்டி எண் 06739 காரைக்கால் - திருச்சி ரெயில் காரைக்காலில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் ரெயில் காரைக்கால் மற்றும் தஞ்சை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரெயில் தஞ்சையில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும். இதேபோல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வண்டி எண் 06683 தஞ்சை- திருச்சி ரெயில் தஞ்சையில் இருந்து 60 நிமிடம் தாமதமாக மாலை 5.20 மணிக்கு புறப்படும்.
மேலும் வருகிற 8-ந்தேதி வண்டி எண் 22628 திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி வரை இயங்கும் இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் 20 நிமிடம் தாமதமாக வரும்.