தண்டவாள பராமரிப்பு பணிக்காக தென் மாவட்ட ரெயில்களின் நேரத்தில் மாற்றம்


தண்டவாள பராமரிப்பு பணிக்காக தென் மாவட்ட ரெயில்களின் நேரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 27 July 2023 2:23 AM IST (Updated: 27 July 2023 2:29 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை மற்றும் ரெயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் தென்மாவட்ட ரெயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை


திருச்சி ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை மற்றும் ரெயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் தென்மாவட்ட ரெயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள்

திருச்சி ரெயில் பெட்டிகள் பணிமனையில் நடந்து வரும் பராமரிப்பு பணிகளுக்காக ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 13-ந் தேதி முதல் பிகானீர்-மதுரை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22632) சென்னையில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு மதியம் 12.50 மணிக்கு வந்தடைகிறது. மாலை 6.40 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும். அஜ்மீர்-ராமேசுவரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20973) அடுத்த மாதம் 19-ந் தேதி முதல் சென்னையில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்படும். செங்கல்பட்டில் இருந்து காலை 10.55 மணிக்கும், விழுப்புரத்தில் இருந்து மதியம் 12.35 மணிக்கும், அரியலூரில் இருந்து மதியம் 2 மணிக்கும் புறப்படும்.

லோகமானியதிலக் (மும்பை) -மதுரை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22101) அடுத்த மாதம் 16-ந் தேதி முதல் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.23 மணிக்கு புறப்படும். திருச்சியில் இருந்து மாலை 3.25 மணிக்கும், திண்டுக்கல்லில் இருந்து மாலை 5 மணிக்கும் புறப்படும். மதுரை ரெயில் நிலையத்துக்கு மாலை 6.40 மணிக்கு வந்தடையும்.

ராமேசுவரம், நெல்லை

ராமேசுவரம்-அயோத்தி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22613) வருகிற 13-ந் தேதியில் இருந்து தஞ்சாவூரில் இருந்து அதிகாலை 6.32 மணிக்கு புறப்படும். கும்பகோணத்தில் இருந்து காலை 7.08 மணிக்கும், மயிலாடுதுறையில் காலை 7.40 மணிக்கும் புறப்படும். ராமேசுவரம்-பனாரஸ் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22535) வருகிற 16-ந் தேதியில் இருந்து தஞ்சாவூரில் இருந்து அதிகாலை 6.32 மணிக்கும், கும்பகோணத்தில் காலை 7.08 மணிக்கும், மயிலாடுதுறையில் காலை 7.40 மணிக்கும், சீர்காழியில் காலை 8.03 மணிக்கும், சிதம்பரத்தில் காலை 8.20 மணிக்கும், கடலூர் துறைமுகம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8.52 மணிக்கும் புறப்படும்.

ஈரோடு-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16845) வருகிற 14-ந் தேதியில் இருந்து ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும். கொடுமுடியில் இருந்து மதியம் 2.30 மணிக்கும், திண்டுக்கல்லில் இருந்து மாலை 4.45 மணிக்கும், மதுரையில் இருந்து மாலை 6.05 மணிக்கும், விருதுநகரில் இருந்து இரவு 7.02 மணிக்கும், கோவில்பட்டியில் இரவு 7.40 மணிக்கும், மணியாச்சியில் இரவு 8.10 மணிக்கும் புறப்படும். நெல்லைக்கு இரவு 9.30 மணிக்கு வந்தடையும்.

செங்கோட்டை

மறுமார்க்கத்தில் நெல்லை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16846) வருகிற 14-ந் தேதியில் இருந்து வெள்ளியணையில் இருந்து மதியம் 12. 25 மணிக்கு புறப்பட்டு மாலை 3 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையம் சென்றடையும். திருச்செந்தூர்-சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16106) வருகிற 14-ந் தேதியில் இருந்து திருச்செந்தூரில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்படும். விருதுநகரில் இருந்து இரவு 11.10 மணிக்கும், மதுரையில் இருந்து நள்ளிரவு 12.10 மணிக்கும், திண்டுக்கல்லில் இருந்து நள்ளிரவு 1.25 மணிக்கும் புறப்படும்.

நாகர்கோவில்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.17236) வருகிற 14-ந் தேதி முதல் நெல்லையில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்படும். விருதுநகரில் இருந்து இரவு 10.25 மணிக்கும், மதுரையில் இருந்து நள்ளிரவு 12.55 மணிக்கும் புறப்படும். நாகர்கோவில்-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12690) நெல்லையில் இருந்து இரவு 9.50 மணிக்கும், விருதுநகரில் இருந்து இரவு 10.25 மணிக்கும், மதுரையில் இருந்து நள்ளிரவு 12.55 மணிக்கும் புறப்படும். மதுரை-செங்கோட்டை ரெயில்(வ.எண்.06663) மதுரையில் இருந்து நண்பகல் 11.20 மணிக்கு புறப்படும். விருதுநகரில் இருந்து மதியம் 12.10 மணிக்கும், சிவகாசியில் மதியம் 12.32 மணிக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் மதியம் 12.48 மணிக்கும் புறப்படும்.


Related Tags :
Next Story