திருச்சி வழியாக இயக்கப்படும் ரெயில் சேவைகளில் மாற்றம்


திருச்சி வழியாக இயக்கப்படும் ரெயில் சேவைகளில் மாற்றம்
x

தண்டவாளங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதையொட்டி திருச்சி வழியாக இயக்கப்படும் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.

திருச்சி

மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி - குமாரபுரம் - கடம்பூர் ரெயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி ரெயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் வண்டி எண். 22627 திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (புதன்கிழமை), மறுமார்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் வண்டி எண். 22628 திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை தாம்பரத்தில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணிக்கு புறப்படும் வண்டி எண். 20691 தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ்ரெயில் திருச்சி மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மேலும், திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு ரெயில் இயக்கப்படாது. இதேபோல் மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து மதியம் 3.50 மணிக்கு புறப்படும் வண்டி எண். 20692 நாகர்கோவில் - தாம்பரம் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்றும், நாளையும் நாகர்கோவில் மற்றும் திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூரில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.05 மணிக்கு புறப்படும் வண்டி எண். 16105 சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், திருச்சி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். திருச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு ரெயில் இயக்கப்படாது. இதேபோல், மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து புறப்படும் வண்டி எண். 16106 திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், இன்றும், நாளையும் திருச்செந்தூர் - திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரெயில் திருச்சியில் இருந்து 11 மற்றும் 12-ந் தேதிகளில் அதிகாலை 2.45 மணிக்கு புறப்படும்.

குருவாயூர் எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூரில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு புறப்படும் வண்டி எண். 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரெயில் சாத்தூர், கோவில்பட்டி மற்றும் மணியாச்சி ரெயில் நிலையங்களை தவிர்த்து விருதுநகர், ராஜபாளையம், தென்காசி மற்றும் நெல்லை வழியாக மாற்று வழியில் இயக்கப்படும். மறுமார்க்கமாக குருவாயூரில் இருந்து புறப்படும் வண்டி எண். 16128 குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் மணியாச்சி, கோவில்பட்டி மற்றும் சாத்தூர் ரெயில் நிலையங்களை தவிர்த்து நெல்லை, தென்காசி, ராஜபாளையம் மற்றும் விருதுநகர் வழியாக மாற்று வழியில் இயக்கப்படும்.


Next Story