சேலம் வழியாக இயக்கப்படும் ரெயில்களில் மாற்றம்
சூரமங்கலம்:-
கேரள மாநிலம் திருச்சூர்-அலுவா ரெயில் நிலையங்களுக்கு இடையே பாலம் பராமரிப்பு பணி காரணமாக, சேலம் வழியாக இயக்கப்படும் ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
பராமரிப்பு பணி
கேரள மாநிலம் திருச்சூர்-அலுவா ரெயில் நிலையங்களுக்கு இடையே பாலம் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக இயக்கப்படும் ரெயில்கள் இயக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில், சென்னை சென்டிரல்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22639) இன்று(புதன்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. ஆலப்புழா-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22640), எர்ணாகுளம்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-12678), நாளை (வியாழக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. பெங்களூரு-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-12677) நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
பகுதியாக ரத்து
சென்னை சென்டிரல்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12623) இன்று மட்டும் பாலக்காடு-திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் (வண்டி எண்-12624) நாளை திருவனந்தபுரம்-பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-13351) நாளை, ஈரோடு- ஆலப்புழா இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் (வண்டி எண்-13352) நாளை ஆலப்புழா- ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
பிரவுனி- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12521) நாளை பாலக்காடு-எர்ணாகுளம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஹூப்ளி- கொச்சுவேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-12777) நாளை போத்தனூர்-கொச்சுவேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் (வண்டி எண்-12778) நாளை மறுநாள் கொச்சுவேலி-போத்தனூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மாற்றுப்பாதையில் இயக்கம்
கன்னியாகுமரி-புனே எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16382) நாளை விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம் வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக செல்லாது. கன்னியாகுமரி- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி 16525) நாளை விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் சேலம் வழியாக செல்லும். இந்த ரெயில் கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக செல்லாது.
இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.