விழுப்புரம்- திருப்பதி முன்பதிவில்லா ரெயில் சேவையில் மாற்றம்..!


விழுப்புரம்- திருப்பதி முன்பதிவில்லா ரெயில் சேவையில் மாற்றம்..!
x
தினத்தந்தி 10 Aug 2023 7:16 AM IST (Updated: 10 Aug 2023 12:10 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம்- திருப்பதி முன்பதிவில்லா ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.

சென்னை,

விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் முன்பதிவில்லா ரெயில் சேவையில் இன்று முதல் வரும் 13-ந்தேதி வரை மாற்றம் செய்யப்படுகிறது. விழுப்புரத்தில் காலை 5.30 மணிக்கு புறப்படும் ரெயிலானது, திருப்பதி செல்லாமல் காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது.

அதேபோல், திருப்பதியில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் ரெயில், காட்பாடியில் இருந்து 4.40 மணிக்கு புறப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.


Next Story