கன்னியாகுமரி-அசாம் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வண்டி எண் மாற்றம்


கன்னியாகுமரி-அசாம் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வண்டி எண் மாற்றம்
x

அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி முதல் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சில எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வண்டி எண்கள் மாற்றப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

அதன்படி, கோவையில் இருந்து அசாம் மாநிலம் சில்சார் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலின் வண்டி எண்-15675 எனவும், சில்சாரில் இருந்து கோவை வரும் ரெயிலின் வண்டி எண்-15676 எனவும் மாற்றப்படுகிறது.

அதேபோல, கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலின் வண்டி எண்-15905 எனவும், திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி வரும் ரெயிலின் வண்டி எண்-15906 எனவும் மாற்றப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story