சரக தடகள போட்டியில் கெலமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்


சரக தடகள போட்டியில் கெலமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை சரக அளவிலான தடகள போட்டிகள் கெலமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 3 ஆயிரம் மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தட்டு எறிதல் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. 15-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 200 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

இதில் கெலமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தாங்கள் கலந்து கொண்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்று, முதலிடம் பிடித்தனர். அவர்களுக்கு தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் அமுதா, மாவட்ட உடற்கல்வி அலுவலர் (பொறுப்பு) வளர்மதி ஆகியோர் கோப்பையை வழங்கினர். முதலிடம் பிடித்த மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் கிரேஸ்பாபுவையும் பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேல் பாராட்டினார்.


Next Story